நேற்று தான் தமிழ் படம் பார்த்தேன். அதுவும் இரவு காட்சி ஆபீஸ்-இல் இருந்து சிலர் சென்றோம். கொஞ்சம் எதிர் பார்ப்புடன் சென்றோம் ஆனால் ஏமாற்றம் இல்லை.
நிறைய யோசித்து பண்ணி இருக்கீறார்கள். கதை என்று ஒன்று இல்லை இருந்தும் ஸ்க்ரீன் ப்ளே நன்றாக இருக்குது. கதை என்ன என்றல் பழைய தமிழ் படங்களை கிண்டல் பண்ணுவதுதான். ஆனா விஜய், சிம்பு ரசிகர்கள் தான் பாவாம் first half முழுவதும் இவர்களை வைத்துதான் காமடி பண்ணுகிறார்கள். சில காட்சிகள் நிஜமாகவே ரசிக்கும் படி இருக்கு. சிவா ஒரு சாங்கில் அதுவும் heroine அப்பா காபி ஆர்டர் பண்ணி அது வருவதிற்குள் கோடிஸ்வரன் ஆவது நல்ல நக்கல் அதுவும் ரஜினி படங்களை காமெடி பண்ணுவது நல்ல தைரியம்.மனோபாலா ஒரு காட்சியில் java படிப்பது நல்ல ஐடியா.ரிலாக்ஸ் பண்ண நல்ல படம் தான் ஆனால் படம் முழுவதும் ஒரே மொக்கை ஜோக் அக இருந்தால் எப்படி டைரக்டர் சார்? பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் தான். கேமரா ஒகே தான். செலவு இல்லாத படம் என்பது நல்ல தெரியுது.
இடையில் அதுவும் second half -ல் கொஞ்சம் டைரக்டர் என்ன செய்ய என்று தெரியாமல் முழிப்பது நமக்கு புரியுது இல்லை என்றல் ..... தமிழ் படம் சூப்பர் பாடம் ஆகி இருக்கும். டைம் இருந்தால் பாருங்கள்.